சுசீந்திரன் இயக்கத்தில் '2K Love Story' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
The trailer of the film 2K Love Story has been released
சுசீந்திரன் இயக்கத்தில் '2K லவ் ஸ்டோரி' என்ற படம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக ஜெகவீர் அறிமுகமாகி உள்ளார்.
இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன் , அந்தோணி பாக்யராஜ் , ஜெயப்பிரகாஷ் , வினோதினி வைத்தியநாதன், ஜி. பி. முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
'2K லவ் ஸ்டோரி' திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை இன்று நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
https://x.com/TheVishnuVishal/status/1882032991695679839/photo/1
https://www.youtube.com/watch?v=k19azk2aBTw
English Summary
The trailer of the film 2K Love Story has been released