உலக புகழ் பெற்ற அந்த பேன்ட்! பாட்டிலுக்கு 10, பைனாப்பிள் கேசரி, கொத்தடிமை! அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அதிமுக பதிலடி!
AIADMK IT Wing Condemn to DMK Minister Senthilbalaji
அதிமுகவின் ஐடி விங்க் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தன்னுடைய நிழலை பார்த்து தானே பயப்படும் உயிரினம் போல அமாவாசை என்றாலே தான்தான், தன்னைத்தான் குறை கூறுகிறார்கள் என உணர்ந்ததால் பொங்கி பொருமி கொண்டிருக்கும் 10 ரூபாய் பாட்டில் புகழ் புழல் தியாகி செந்தில்பாலாஜி அவர்களே!
பல கட்சி மாறி, உருண்டு சென்று, மண் சோறு சாப்பிட்டு தலையில் அலங்காரம் செய்து அலங்கோலமாக திரிந்து தற்போது ஆட்சி அதிகாரம் உள்ள இடத்தில் கொத்தடிமைகளில் ஒருவராக தஞ்சம் புகுந்து, பிணையில் தற்காலிக அமைச்சராக இருக்கும் நீங்கள்தான் சுயநலத்தின் மொத்த உருவம்..
பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் பைனாப்பிள் கேசரி வரை புகழ் பெற்று தற்போது தியாகியாக பதவி உயர்வு பெற்ற உங்களை அரசியல் வியாபாரி என்று சொல்லாமல் வேறு யாரை சொல்ல முடியும்.
அரசியல் அதிகாரம் மற்றும் பதவி சுகத்திற்க்காக இங்கிருந்து அங்கு தாவி, அங்கிருந்து இங்கு தாவி எந்தவொரு எல்லைக்கும் செல்ல தயங்காத உங்களை போன்றோருக்கு அதிமுகவை பற்றியோ எங்கள் தலைவரைப் பற்றியோ பேச துளியும் அருகதை இல்லை..
(பி.கு)அரசியல் வியாபாரியாக இருந்த தாங்கள் தியாகியாக துணை புரிந்த உலக புகழ் பெற்ற அந்த பேன்ட் தற்போது அண்ணா அறிவாலய வளாகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதா? இல்லை பாதுகாக்கும் பொருட்டு அருங்காட்சியகத்தில் இருக்கிறதா?" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
AIADMK IT Wing Condemn to DMK Minister Senthilbalaji