பழனியில் அன்னதானம் வழங்குபவரா நீங்கள்? - இனி கட்டாயம் இது தேவை..!
food safety department order permission for annathanam in palani temple
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 5ம் தேதி தைப்பூச திருவிழா தொடங்குகிறது.
வழக்கமாக பழனி கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கும் முன்பே பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி கடந்த சில வாரங்களாகவே பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையாக அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவோருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், அன்னதானம் வழங்க பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக்கூடாது என்றும் அன்னதானம் வழங்கிய பின் சம்பந்தப்பட்ட இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
English Summary
food safety department order permission for annathanam in palani temple