பிரபல செய்தி நிறுவனத்தின் 29.18% பங்குகளை வாங்கிய அதானி குழுமம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவி நிறுவனத்தின் 29.18 சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது. மேலும், அந்நிறுவனூஅதின் நிர்வாக முடிவுகளைக் எடுக்கக் கூடிய பங்குதாரராகவும் மாறியுள்ளது.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர். இவர் உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். 

கௌதம் அதானி புதிதாக பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 5ஜி ஏலத்தில் அதானி நெட்வோர்க் என்கிற புதிய நிறுவனம் பங்குபெற்றது.

இத்துடன், கௌதம் அதானி ஒடிசா மாநிலத்தின் ராயகடா பகுதியில் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்காக அம்மாநில அரசிடம் உரிமம் பெற்றுள்ளார். மேலும், அந்நிறுவனத்தில் ரூ.41,000 கோடியை முதலீடு செய்ய உள்ளார்.

இதனை தொடர்ந்து இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 29.18 சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது. எனவே, என்டிடிவி நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளைக் எடுக்கக் கூடிய பங்குதாரராக அதானி குழுமம் செயல்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adani Group bought NDTV news company


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->