ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 25 ரூபாய் வசூல்.! இன்றுமுதல் அமலுக்கு வந்தது.! மக்களே இதனை மறந்துவிடாதீர்.! - Seithipunal
Seithipunal


இன்று முதல் (ஜனவரி 1) வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து, ஒரு பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் வசூலிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக ஒரு வங்கி வாடிக்கையாளர், தங்கள் ஏ.டி.எம்.,களில் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என்ற முறை இருந்து வந்தது. அதன்பிறகு அவர்கள் பணம் எடுத்தால் மற்றும் வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் செக் செய்தால்கூட ஜிஎஸ்டி உடன் 23 ரூபாய் 60 பைசா கட்டணமாக பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த கட்டணம் இன்றுமுதல் (ஜனவரி 1) உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாதாந்திர இலவச பரிவர்த்தனையை தாண்டி ஏடிஎம் மையங்களில் பயன்படுத்துவோருக்கு ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ATM Transection Charge Hike NOW


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->