தனுஷின் 55 வது படத்தில் இணையும் 3 பட நடிகை.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் 'குபேரா' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

அதே சமயம், இவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தனுஷின் 55-வது படத்தை 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது. 

இதை `கோபுரம் பிலிம்ஸ்' அன்புசெழியன் தயாரிக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிகை சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விரைவில் இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுருதிஹாசன் ஏற்கனவே தனுஷுடன் இணைந்து '3' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sruthihaasan joined dhanush 55 movie


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->