2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படங்கள்!
2024 TAMIL CINEMA
2024 ஆம் ஆண்டு நிறைவடைந்துவரும் நிலையில், தமிழ்த் திரைப்படங்களின் வசூல் விவரங்கள் மற்றும் சாதனைகள் ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதில் சில விவரங்கள் பின்வருமாறு:
சர்வதேச அளவில், தமிழில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் புகழ்பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் சிறப்பு கவனம் பெற்றது.
வணிக ரீதியாக, விஜய்யின் கோட் ரூ. 450 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
சிவகார்த்திகேயனின் அமரன் ரூ. 300 கோடி, வேட்டையன் ரூ. 250 கோடி,
விஜய் சேதுபதியின் மகாராஜா (ரூ. 170 கோடி),
கமல்ஹாசனின் இந்தியன் 2 (ரூ. 160 கோடி),
தனுஷின் ராயன் (ரூ. 150 கோடி),
சூர்யாவின் கங்குவா (ரூ. 130 கோடி),
அரண்மனை 4 (ரூ. 110 கோடி),
தங்கலான் (ரூ. 90-100 கோடி),
கேப்டன் மில்லர் (ரூ. 90 கோடி)
மேலும், லவ்வர், கருடன், லப்பர் பந்து, பிளாக், மெய்யழகன் போன்ற குறைந்த பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இந்த படங்கள் வணிக வெற்றியுடன், ரசிகர்களிடமிருந்து கலைமிகு பாராட்டுகளையும் பெற்றன.