சூர்யா 44 - புதிய அப்டேட் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. 

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றுத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் குறித்த புதிய அப்டேட்டை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். அதாவது, கிறிஸ்துமஸ் பரிசாக இந்தப் படத்தின் டைட்டில் டீசர் நாளை காலை 11 மணியளவில் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director karthick supuraj announce surya 44 tittle teaser released time


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->