கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இளம்பெண் - 50 லட்சம் நிதியுதவி அளித்த தயாரிப்பாளர்.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. இதைப்பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் வந்தனர்.

இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தக் கூட்டத்தில், சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும், அவரது மகன் ஸ்ரீதேஜா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த சம்பவத்தால் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஐதராபாத் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து அல்லு அர்ஜுன் பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்தினருக்கு தன்னுடைய சார்பில் ரூ. 25 லட்சம் வழங்குவதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் உடல்நலம் குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டார். இந்த நிலையில் 'புஷ்பா 2' பட தயாரிப்பாளர், கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pushpa 2 producer 50 lakhs compensation announce to women died people family


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->