பாடல் காப்புரிமை வழக்கில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அபராதம்..!
Fine for AR Rahman in the song copyright case
பத்மஸ்ரீ விருது பெற்ற பாரம்பரிய பாடகர் பயாஸ் வாசிபுதின் தாகர். இவர் தமது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட சிவ ஸ்துதி பாடலில் இருந்து பொன்னியின் செல்வன் பாகம் 02 படத்தில் இடம்பெற்ற வீர ராஜ வீர என்ற பாடல் நகல் எடுக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மெட்ராஸ் டாக்கீஸ் பட தயாரிப்பு நிறுவனம் ரூ.02 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயாஸ் வாசிபுதின் தாகர் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், ஏ.ஆர். ரஹ்மான், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தை பிரதிவாதிகளாக சேர்த்திருந்தார். அவருடைய மனுவில் இவர்கள் இந்த பாடலை பயன்படுத்துவதை தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், இழப்பீடு தர வேண்டும் எனவும் கோரி இருந்தார்.
மேலும் பாடல் வெவ்வேறு வரிகளை கொண்டு இருந்தாலும் அதன் தாளம், இசை அமைப்பு சிவ ஸ்துதியை போலவே இருப்பதாக மனுதரார் தாகர் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு இதற்கு மறுத்து தெரிவித்தது.

இந்நிலையில், சிவஸ்துதி என்பது ஒரு பாரம்பரிய இசையமைப்பு, இது பொது தளத்தின் ஒரு பகுதி, 227 தனித்துவமான அடுக்குகளை கொண்ட மேற்கத்திய இசையை பயன்படுத்தி இயற்றப்பட்ட அசல் படைப்பு என்று ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், தாகரின் வழக்கில் இன்று (ஏப்ரல் 25) நீதிபதி பிரதிபா எம். சிங் தீர்ப்பளித்தார். அதில் சிவஸ்துதி பாடலின் இசையமைப்பை வீர ராஜ வீர பாடல் அடிப்படையாக கொண்டுள்ளது. அத்துடன், சில மாற்றங்களுடன் ஒத்துப்போகிறது என்ற அவர் கூறியுள்ளார். இதனால், ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ரூ.02 கோடியை அபராதமாக டில்லி நீதிமன்றத்தில் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Fine for AR Rahman in the song copyright case