சென்னை - ராஜஸ்தான், மதுரை - ராஜஸ்தான் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்..!
Special train operation between Chennai to Rajasthan
சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் பஹத்ஹிகோதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் செய்திக்குறிப்பு வெளியிட்டு கூறியுள்ளதாவது:-
எதிர்வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 07.45 மணிக்கு, சென்னையில் இருந்து சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரெயில் நிலையத்துக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது.
குறித்த ரயில் மறுமார்க்கமாக ராஜஸ்தானில் மாநிலம் பஹத்ஹிகோதியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி புதன்கிழமை அன்று ராஜஸ்தானில் இருந்து காலை 05.30 மணிக்கு புறப்படும்என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்டி அமைப்பு:
01- ஏசி இரண்டு அடுக்கு பெட்டிகள்,
02- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள்,
16- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் 02- இரண்டாம் வகுப்பு பெட்டிகள்.
மதுரை - ராஜஸ்தான்
மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரெயில் நிலையத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திங்கட்கிழ்மையில் மதுரையில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படுகிறது.
மறுமார்க்கமாக ராஜஸ்தானில் மாநிலம் பஹத்ஹிகோதியில் இருந்து மதுரை ரெயில் நிலையத்துக்கு வருகிற மே 01-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ராஜஸ்தானில் இருந்து காலை 05.30 மணிக்கு புறப்படும்.
பெட்டி அமைப்பு:
12- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள்,
04- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2- லக்கேஜ் கம் பிரேக் வேன்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது
English Summary
Special train operation between Chennai to Rajasthan