லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன்? ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன்? – திரையுலகில் பரபரப்பு தகவல்!
Sivakarthikeyan as the hero in Lokesh Kanagaraj next film Shruti Haasan as the heroine Exciting news in the film industry
சென்னை, ஏப்ரல் 12:தமிழ் சினிமாவின் தற்போதைய பிரபல மற்றும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என தொடர் வெற்றிகளை பெற்ற இவர், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள 'கூலி' படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.
கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட லோகேஷ், ஆரம்பத்தில் ஒரு வங்கி ஊழியராக இருந்தாலும், திரைப்படத்தில் ஆர்வம் காரணமாக 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி வழியாக சினிமா பயணத்தை தொடங்கினார். பின்னர் கார்த்திக் சுப்புராஜின் ஆதரவுடன் ‘அவியல்’ ஆந்தாலஜி திரைப்படத்தில் பங்களிப்பு அளித்தார். 2017ல் வெளியான ‘மாநகரம்’ படத்தின் மூலம் தனது இயக்குனர் திறமையை அனைவரும் உணர்த்தினார்.
அதைத் தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என அனைத்து படங்களுமே வெற்றி பெற்ற நிலையில், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தையும் இவர் முடித்துள்ளார். இந்த படம், தங்கக் கடத்தலை மையமாக கொண்டு, ரஜினிகாந்த் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கும் பான் இந்தியா படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘கூலி’ படத்தை தொடர்ந்து, லோகேஷ் தனது அடுத்த படத்துக்கான ப்ரீ-புரோடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே அவர் சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவலின்படி, லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்திற்காக சிவகார்த்திகேயனை ஹீரோவாக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு ஜோடியாக, ‘கூலி’ படத்திலும் நடித்த ஸ்ருதி ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தகவல்கள் உறுதியாகிக்கின்றன.
இது உண்மையாக இருந்தால், சிவகார்த்திகேயன் – லோகேஷ் கூட்டணியும், ஸ்ருதி ஹாசன் – லோகேஷ் கூட்டணியும் முதல் முறையாக உருவாகும் என்பதோடு, ரசிகர்கள் மத்தியில் புதிய கோணத்தில் எதிர்பார்ப்பை உருவாக்கும். இத்திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Sivakarthikeyan as the hero in Lokesh Kanagaraj next film Shruti Haasan as the heroine Exciting news in the film industry