டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!
Raid case at TASMAC headquarters Tamil Nadu government appeals in the Supreme Court
தமிழக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை திடீர் நடத்திய சோதனை நடத்தியது. கடந்த மார்ச் 06-ஆம் தேதி முதல் 08-ஆம் தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த திடீர் சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகமும், தமிழக அரசு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் சட்டவிரோதம் என அறிவிக்க முடியாது என்று கூறிய உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அஅத்துடன், டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, டாஸ்மாக் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி மனுவை தாக்கல் செய்து பின்னர் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
English Summary
Raid case at TASMAC headquarters Tamil Nadu government appeals in the Supreme Court