அதிகாலையிலேயே அதிரவைத்த சிலிண்டர் விலை.!
commercial gas price increase septamber 1st
கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த மாதம் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.7.50 உயர்ந்து ரூ.1,817க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று வரை ரூ.1,817 என்று விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக சிலிண்டர் விலை தற்போது ரூ.38 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ரூ.1,855க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேசமயம் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ரூ.818.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
commercial gas price increase septamber 1st