நெல்லையில் அடுத்தடுத்து நடக்கும் கொடூரம் - நடுரோட்டில் வாலிபர் வெட்டிக் கொலை.!
youth murder in nellai
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி கீழ நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்லதுரை என்பவரின் மகன் மணிகண்டன். சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ள இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இவர் நேற்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வயலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அதன் படி இவர் கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, சேரன்மாதேவி லால் பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் மணிகண்டனை வழிமறித்து, நடுரோட்டில் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதனால், படுகாயமடைந்த மணிகண்டனை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மாணிக்கணப்பிடன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் மணிகண்டன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோட்டராங்குளத்தில் சிவராமன் என்ற வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் மணிகண்டனின் நெருங்கிய உறவினருக்கு தொடர்பு இருந்ததனால் மணிகண்டனை, கொலை செய்யப்பட்ட சிவராமனின் தாய்மாமா மாயாண்டி கத்தியால் குத்திக் கொன்றது தெரியவந்துள்ளது.
பழிக்குப் பழியாக நடந்த இந்த பயங்கர சம்பவத்தால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் தப்பியோடிய மாயாண்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.