இன்று முதல் கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்..தினமும் ரூ.300 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்!
Crushers, gravel manufacturers to go on strike from today Revenue loss of Rs 300 crore daily
கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அரசுக்கு தினமும் ரூ.300 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
குவாரிகளில் இருந்து கல் எடுத்து வர இதுவரை கனமீட்டர் அடிப்படையில் அரசுக்கு கல்குவாரிகள் வரி செலுத்தி வருகிறது . ஆனால் தற்போது மெட்ரிக் டன் முறையில் வரி செலுத்த வேண்டும் என்று அரசு புதிதாக வரி விதித்து உள்ளது. இதனால் ஜல்லி, எம். சாண்ட் மற்றும் பி.சாண்ட் ஆகியவற்றுக்கு விலையை உயர்த்த கல்குவாரிகள் முடிவு செய்து உள்ளது.

இந்தநிலையில் புதிதாக விதிக்கப்பட்டு உள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சேலம் மண்டல கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜா தெரிவித்துள்ளார். அப்போது மேலும் அவர் கூறியதாவது: . வேலை நிறுத்த போராட்டத்தால் அரசுக்கு தினமும் ரூ.300 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறினார் . மேலும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Crushers, gravel manufacturers to go on strike from today Revenue loss of Rs 300 crore daily