தாய்ரா படத்தி மூலம் பிருத்விராஜுடன் முதன் முறையாக இணையும் கரீனா கபூர்..!
Kareena Kapoor will be teaming up with Prithviraj for the first time through the film Daayra
பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 'எல் 2 எம்புரான் ' படம் வெளியாகி, மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இப்படத்தை "சாம் பகதூர்" பட வெற்றியைத் தொடர்ந்து மேக்னா குல்சார் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு "தாய்ரா" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
'ராசி' மற்றும் 'தல்வர்' போன்ற வெற்றிப்படங்களுக்கு பிறகு ஜங்கிலி பிக்சர்ஸுடன் மேக்னா குல்ஜார் மீண்டும் இணைந்துள்ளார்.
இதில் முதல் முறையாக பிருத்விராஜுடன் கரீனா கபூர் இணைந்து நடிக்கவுள்ளார். தற்போது பிரீ புரொடக்சனில் உள்ள "தாய்ரா" படத்தை யாஷ், சிமா மற்றும் மேக்னா குல்சார் இணைந்து எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Kareena Kapoor will be teaming up with Prithviraj for the first time through the film Daayra