ஹோண்டா அட்வென்ச்சர் பைக் பற்றிய விவரங்கள்! - Seithipunal
Seithipunal


ஹோண்டா நிறுவனம் அதன் புதிய ஹோண்டா டிரான்சால்ப் 800 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மாடல் ரெட், வைட் மற்றும் புளூ என மூன்று விதமான நிறங்களில் காட்சியளிக்கிறது. இது டாப் எண்ட் மாடலாகவே இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய டிரான்சால்ப் மாடல் ரோட் சார்ந்த மாடலாகவே காட்சியளிக்கிறது. இந்த பைக்கில் 21 இன்ச் அளவில் ஸ்போக் வீல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஆப் ரோடிங் திறன்களையும் பெற்று இருக்கும் கூறப்படுகிறது.

புதிய ஹோண்டா டிரான்சால்ப் 800 மாடலில் 800சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஹார்னெட் ரோட்ஸ்டர் மாடலிலும் வழங்கப்பட உள்ளது. இந்த என்ஜின் மூலம் ஹோண்டா நிறுவனம் யமஹா டெனெர் 700 மாடலை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில்  அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, இதே மோட்டார்சைக்கிளின் டிசிடி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Details about Honda Adventure Bike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->