வேலியே பயிரை மேய்ந்தது... போலீஸ் எஸ்ஐ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன், மற்றும் பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமின் கோரி நன்கு பெரும் தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது. 

இதனையடுத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜாசிங் மற்றும் வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முன், வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று கூறி ஜமீனுக்கு காவல்துறையின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சன்னி லாய்டு கைது செய்யப்பட்டு, அவர் மீது விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, "வேலியே பயிரை மேய்ந்தது போல், காவல்துறை அதிகாரிகளே குற்றத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது" என்று கூறி, வழக்கின் விசாரணையை ஜனவரி 28-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras High Court TN Police SI Kidnaped case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->