3,800 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஃபோர்டு திட்டம்?! வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐரோப்பாவில் உள்ள ஃபோர்டு நிறுவனம் தனது 3,800 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்தாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த 3 ஆண்டு காலத்தில் உயரும் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,  ஐரோப்பாவில் 3,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஃபோர்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான அந்த தவளின்படி, ஃபோர்ட் நிறுவனத்தின் ஜெர்மன் கிளையில்  2,300 பேரையும், பிரிட்டன் கிளையில்  1,300 பேரையும் நீக்க உள்ளத்தக்க தெரிகிறது. 

மேலும், ஐரோப்பா முழுவதும் 200 பேரையும் பணிநீக்கம் செய்ய ஃபோர்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, ஜெர்மனியின் ஃபோர்டு நிறுவன தலைவர் மார்ட்டின் சாண்டர் தெரிவிக்கையில், "இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஃபோர்டு தனது முதல் மின்சார வாகனத்தை  கொலோனில் உள்ள வோக்ஸ்வாகனின் எம்இபி பிளாட்ஃபார்மில் கட்டமைக்க உள்ளது. 

கார் தயாரிப்பாளரின் மின்மயமாக்கல் உத்தியில் எந்தவித மாற்றமில்லை. ஐரோப்பாவில் உள்ள வாலேன்சியாவில் ஃபோர்டு இயங்குதளத்தை கொண்டுவருவது குறித்து பரிசீலனை  நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Europe Ford Car Company Job issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->