இனி எதிர்காலம் எலெக்ட்ரிக் கார் கையில் தான் - ஆடி இந்தியா அதிரடி அறிவிப்பு!
future is electric cars Audi India
ஆடி இந்தியா நிறுவனம் நாடு முழுக்க 60 நகரங்களில் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கட்டமைத்துள்ளது. ஆடி விற்பனை மையங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் விற்பனை மையங்களில் பாஸ்ட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஆடி விற்பனை மையங்களிலும் 22 கிலோ வாட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. 16 விற்பனை மையங்களில் 50 கிலோ வாட் டிசி பாஸ்ட் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஆடி பாஸ்ட் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஆடி நிறுவனம், இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. ஆடி நிறுவனம் தற்போது இ-டிரான் எஸ்யுவி, இ-டிரான் ஸ்போர்ட் பேக், இ-டிரான் ஜிடி மற்றும் ஆர்எஸ் இ-டிரான் ஜிடி போன்ற எலெக்ட்ரிக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
ஆடி இந்தியா நிறுவன தலைவர் பால்பிர் சிங் திவான், " நாங்கள் நாடு முழுக்க 100-க்கும் அதிக சார்ஜர்களை இன்ஸ்டால் செய்துள்ளோம். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த உள்ளோம். எதிர்காலம் எலெக்ட்ரிக் தான், அதற்கு ஆடி இந்தியா தயாராக இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.
English Summary
future is electric cars Audi India