பட்ஜெட் எதிரொலி : தொடர்ந்து 2 வது நாளாக சரிவில் 'தங்கம்' விலை..!! - Seithipunal
Seithipunal



மத்திய பட்ஜெட் எதிரொலியாக தொடர்ந்து 2ம் நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. இதற்கு பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கான வரி குறைக்கப் பட்டுள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது. 

நேற்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது நிதியமைச்சர் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார். இதையடுத்து இந்த வரிக்குறைப்பு அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே நேற்று (ஜூலை 23) தங்கம் கிராமுக்கு ரூ. 275ம் , சவரனுக்கு ரூ. 2200ம் குறைந்தது. 

இதையடுத்து நேற்று தங்கம் கிராமுக்கு ரூ. 6, 550 க்கும், சவரனுக்கு ரூ. 52, 400க்கும் விற்பனையானது. இந்நிலையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 60 குறைந்து ரூ. 6 ஆயிரத்து 490க்கும், சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 51 ஆயிரத்து 920 க்கும் விற்பனை செய்யப் படுகிறது. 

மேலும் வெள்ளியின் விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ. 92க்கு விற்பனை ஆகிறது. மேலும் 1 கிலோ பார் வெள்ளி ரூ. 92 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த விலை குறைப்பு மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து நகை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், இந்த வரிக்குறைப்பு மூலம் தங்கம் விற்பனை அதிகரிக்கும். மேலும் இதனால் பொதுமக்கள் தங்கம் அதிகம் வாங்குவதோடு, தங்கத்தில் முதலீடு செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இறக்குமதி வரி குறைக்கப் பட்டுள்ளதால், தங்கக் கடத்தலும் தடுக்கப்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold Price Lowers On 2nd Consecutive Day Due to Central Budget


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->