அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.! பட்ஜெட் எதிரொலி.! - Seithipunal
Seithipunal


நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது குடியரசுத் தலைவர் உரையுடன் துவங்கியது. இந்த நிலையில், 2023 மற்றும் 2024 ஆம் நிதியாண்டிற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி இருக்கின்றார்.

இந்த மத்திய பட்ஜெட் தாக்கலில் இந்தியாவிற்கு வருகின்ற தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரித்ததன் விளைவாக தங்க விலை கடும் உயர்வடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று வெளியாகிய பட்ஜெட் அறிவிப்பால் ஒரே நாளில் இரண்டு முறை தங்க விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹.440 உயர்ந்து ₹.43, 320 ரூபாய்க்கும், ஒரு கிராம் ₹.55 ரூபாய் உயர்ந்து ₹.5415 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அது போல வெள்ளி விலையும் கிலோவுக்கு ₹.1200 உயர்ந்து இருப்பதால் ஒரு கிலோ ₹.76 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிராம் ₹.76 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold Rate Hike twice In today by Budget 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->