டீ, பிஸ்கட் சாப்பிட்ட குழந்தை - நொடிப்பொழுதில் உயிரிழந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடி பூண்டி குருபராஜ கண்டிகை கிராமத்தில் வசித்து வந்தவர் அரிகிருஷ்ணன். குறவர் இனத்தை சேர்ந்த இவருடைய 3 வயது குழந்தைக்கு, கடந்த 2 நாட்களாக உடல் நலக் குறைபாடு இருந்துள்ளது. 

இதையடுத்து, அரிகிருஷ்ணன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு சிக்கிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், அரிகிருஷ்ணன் குழந்தைக்கு உடம்பு சரி இல்லாததால், டீ கடையில் உள்ள டீயும் பிஸ்கட்டும் வாங்கி கொடுத்துள்ளார். அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் தூக்கி கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். 

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

உயிரிழந்த குழந்தைக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், குழந்தை உயிரிழப்புக்கு மூச்சுத்திணறலே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl baby died for eat tea biscuit in tiruvallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->