ஹீரோ "சூப்பர் ஸ்பிலெண்டர்" கேன்வாஸ் "பிளாக் எடிஷன்" மாடல்.!  இவ்வளவுதான் விலையா?! முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் சூப்பர் ஸ்பிலெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிஷன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும், இதற்கான முன்பதிவு  தொடங்கப்பட்டுள்ளது. 

ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிஷன் மாடலின் விலை விவரங்கள்: 

* ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் டிரம் -ரூ. 77 ஆயிரத்து 430.

* ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் டிஸ்க் -ரூ. 81 ஆயிரத்து 330.

ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிஷன் மாடலின் சிறப்பு அம்சங்கள்:

* இதில் ஆல் பிளாக் பெயிண்ட், சூப்பர் ஸ்பிலெண்டர் பேட்ஜ், அதிக அளவில் குரோம் எலிமெண்ட்கள் உள்ளன. 

* இதன் டிசைன் மற்றும் தோற்றம் அதன் ஸ்டாண்டர்டு மாடலை போன்றே காட்சி அளிக்கிறது. 

* இதில் சிங்கில் பாட் ஹெட்லைட், டிண்ட் செய்யப்பட்ட வைசர், ஒற்றை இருக்கை, அலாய் வீல்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. 

* பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 124.7சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் உள்ளன. 

* இதன் என்ஜின் 10.7 ஹெச்.பி. பவர் மற்றும் 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டது. 

* டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், 5 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட பின்புற ஸ்ப்ரிங், 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக்குகள் உள்ளன. 

* இதன் டிஸ்க் பிரேக் வெர்ஷனில் முன்புறம் 240 மில்லிமீட்டர் ரோட்டார் மற்றும் பாதுகாப்புக்காக கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hero Motocorp Hero Super Splendor Motorcycle bike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->