மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே பதவியேற்றுக்கொண்டுள்ளார்..!
Alok Aradhe has taken oath as the Chief Justice of the Bombay High Court
மும்பை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே பதவியேற்று கொண்டுள்ளார்.அவருக்கு மராட்டிய கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மராட்டிய துணை முதல்-மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே மற்ற மற்றும் அஜித் பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதற்கு முன் மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய், கடந்த 17-ஆம் தேதி பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து, அலோக் ஆராதே பதவியேற்று கொண்டுள்ளார்.
இதேபோன்று, டெல்லி கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய், டெல்லி ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பதவியேற்று கொண்டுள்ளார். இதில், டெல்லியின் முதல்-மந்திரி அதிஷி, மூத்த அரசு அதிகாரிகள், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Alok Aradhe has taken oath as the Chief Justice of the Bombay High Court