06 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து வரும் அபூர்வ நிகழ்வு; நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள்..! - Seithipunal
Seithipunal


நமது சூரிய குடும்பத்தில் பூமி உள்பட அனைத்து கிரகங்களும் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில், வெவ்வேறு சுற்றுப்பாதை வேகத்துடன் சூரியனை சுற்றி வருகின்றன. இவ்வாறு சுற்றி வரும் கிரகங்களை நாம் பூமியில் இருந்து சில சமயங்களில் ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு மிகவும் அரிதாக அமைகிறது.

பொதுவாக 03 அல்லது 04 கோள்களை ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆனால், 06 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து வரும் அபூர்வ நிகழ்வானது பார்த்திருப்போமா? அதாவது, வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்பட்டு வருகின்றன.

இவற்றை காண்பதற்காக அறிவியல் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் இன்று முதல் வருகின்ற சனிக்கிழமை 25-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

இதில் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கோள்களை வெறும் கண்களாலும்,நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்களை மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளாலும் காண முடியும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் வருகிற 25 ஆம் தேதி வரை தினமும் மாலை 06 முதல் இரவு 08 மணி வரை தொலை நோக்கி மூலமாக பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற 05 அல்லது 06 கோள்களின் அணிவகுப்பு மீண்டும் அடுத்த மாதம் பிப்ரவரி 28 உம், ஆகஸ்டு 29 ஆகிய நாட்களிலும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த மாத நிகழ்வில் சந்திரனும் ஒரே வரிசையில் தென்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A rare event where 06 planets are marching in a straight line


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->