கியா மோட்டார்ஸ் எதிர்கால விற்பனை திட்டங்களை மாற்றியமைக்கிறது: புதிய திட்டத்தோடு களம் இறங்கும் KIA: 10 கார்கள் அறிமுகம், எலக்ட்ரிக் கார் விற்பனை குறைப்பு!
Kia Motors changes future sales plans KIA to launch new plan 10 cars introduced electric car sales reduced
தென் கொரியாவைச் சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான கியா, தனது நீண்டகால உலகளாவிய விற்பனை இலக்குகளை மாற்றியமைத்து, மின்மயமாக்கப்பட்ட வாகனங்கள் பக்கம் இன்னும் வலுவான கவனம் செலுத்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கான முதலீட்டாளர் தின நிகழ்வில் கியா தலைமை நிர்வாக அதிகாரி வான் டே-ஜின் பார்க் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதலில் 2030-ஆம் ஆண்டுக்குள் 4.19 மில்லியன் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யும் இலக்கை வைத்திருந்த கியா, தற்போது அந்த எண்ணிக்கையை 1.26 மில்லியனாகக் குறைத்துள்ளது. இருப்பினும், நிறுவனம் தனது மின்மயமாக்கப்பட்ட வாகன வரிசையில் 15 புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் EV2, EV4, EV5 ஆகியவையும் மூன்று புதிய எலக்ட்ரிக் வேன்களும் இடம்பெறுகின்றன.
மற்றொரு முக்கிய மாற்றமாக, ஹைப்ரிட் வாகனங்களுக்கு கியா அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் 4.9 லட்சம் ஹைப்ரிட் வாகனங்களை விற்பனை செய்யும் இலக்கிலிருந்து, 2030-க்குள் அதை ஒரு மில்லியனாக உயர்த்த கியா திட்டமிட்டுள்ளது. இதற்காக பிளக்-இன் ஹைப்ரிட் வகைகளை உட்பட 10 புதிய ஹைப்ரிட் மாடல்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் கியா ஈடுபட்டுள்ளது.
இந்திய சந்தையை தற்காலிகமாக டீசல் வாகனங்களுடன் தொடரும் என கியா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் தெரிவித்திருந்தாலும், எதிர்கால வளர்ச்சிக்கு ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கியா செல்டோஸ் ஹைப்ரிட், கேரன்ஸ் ஹைப்ரிட், சோனெட் ஹைப்ரிட் ஆகிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், கியா நிறுவனம் புதிய 2.5L TGDi 4-சிலிண்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜினை உருவாக்கி வருகிறது. இது உள் எரிப்பு, ஹைப்ரிட் மற்றும் எக்ஸ்டென்டட் ரேஞ்ச் எலக்ட்ரிக் வாகனங்களுக்காக ஒரு ஜெனரேட்டராக செயல்பட முடியும். இந்த புதிய இன்ஜின் தற்போதையதைவிட 12 சதவீதம் அதிக சக்தியுடன், 5 சதவீதம் சிறந்த வெப்ப செயல்திறனுடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் மொத்த வாகன விற்பனையை 4.25 மில்லியனாக உயர்த்தும் இலக்குடன், கியா எதிர்கால சந்தைகளில் வலிமையான இடத்தை பிடிக்க திட்டமிட்டு முன்னேறி வருகிறது.
English Summary
Kia Motors changes future sales plans KIA to launch new plan 10 cars introduced electric car sales reduced