மஹிந்திராவின் புதிய லோகோ! இனிமே இப்படித்தான் - முழு விவரம்!
Mahindras New Logo
மஹிந்திரா நிறுவனம் அதன் புதிய லோகோவை அனைத்து மாடல்களிலும் வழங்கும் பணிகளை துவங்கி உள்ளது.
தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதிய லோகோ XUV700, ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ ஆகிய மூன்று மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம் அதன் புதிய பொலிரோ நியோ மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.
இதன் சிறப்பு அம்சங்கள்:
• இந்த காரில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ட்வின் லோகோ வழங்கப்பட்டுள்ளது.
• மேலும், காரின் கிரில், வீல் மற்றும் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவைகளில் புதிய பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.
• இது மஹிந்திரா பொலிரோ நியோ மாடலின் டாப் எண்ட் N10 (O) வேரியண்ட் ஆகும்.
• இதில், புதிய லோகோ தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
• இந்த மாடலில், 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட எம் ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
• இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர் மற்றும் 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
• இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.