மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
man arrested for bomb threat to mumbai international airport
கடந்த மூன்றாம் தேதி மும்பை போலீசாருக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணிக்குள் வெடிகுண்டு வெடிக்க போவதாக கூறிவிட்டு போன் அழைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் மும்பை விமான நிலையத்தில் சோதனை செய்தனர். அப்போது வெடிகுண்டு வெடிக்க போவதாக வந்த தகவல் பொய் என்பது தெரியவந்தது.
இதையடுத்த போலீசார் விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தியதில் செல்போனில் பேசிய நபர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே மும்பை போலீசார் புதுச்சேரி காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டனர். அதில் மிரட்டல் விடுத்த நபர் மேட்டுப்பாளையம் அமைதி நகர் முதல் குறுக்கு தெருவில் வசிக்கும் தீபக் என்பது தெரியவந்தது.
மேலும் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் 17 ஆண்டுகளாக குடும்பத்துடன் புதுச்சேரியில் வசித்து வந்ததும், தீபக் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் செல்போனில் மும்பை விமான நிலையத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதற்கு முன்னதாக இவர் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போலீசார் தீபக்கை நேற்று கைது முன் தினம் கைது செய்தனர்.
English Summary
man arrested for bomb threat to mumbai international airport