சரிந்து வரும் பேடிஎம் பங்குகள்! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.!
PayTM Share Market
பேடிஎம் நிறுவன பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போருக்கு பிறகு உலக அளவில் பங்குச் சந்தைகள் மிகுந்த சரிவையும் ஏற்றத்தையும் சந்தித்து வருகின்றன.
இந்திய பங்குச் சந்தைகளும் குறிப்பாக மும்பை பங்குச் சந்தை கடுமையான சரிவையும் ஏற்றத்தையும் சந்தித்து வருகிறது. இதில் இணைய பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிந்த வண்ணம் இருப்பதால் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் ஒரு பங்கின் விலை 850 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. ஆனால் இன்று 618 ரூபாய் வரை வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதில் முதலீடு செய்தவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இது பங்குதாரர் பங்குதாரர்களிடையே பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக பணபரிவர்த்தனை விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தினால் பேடிஎம் பேமெண்ட் வங்கிகள் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க மார்ச் 11ஆம் தேதியன்று ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன் காரணமாகவும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகள் சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.