நாங்கள்தான் அடுத்த ஆட்சி என சிலர் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் ..சீமான்,விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய மு.க.ஸ்டாலின்!
Some people are saying that we are the next government MK Stalin slams Vijay, Seeman
நாங்கள்தான் அடுத்த ஆட்சி, நாங்கள்தான் அடுத்த முதல்-அமைச்சர் என சிலர் சுற்றிக்கொண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். என்றும் அவர் யார், எப்படிப்பட்டவர், எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் உள்பட 2,000 பேர் மற்றும் பிற கட்சியினரை சேர்ந்த 1,000 பேர் என மொத்தம் 3,000 பேர் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அப்போது விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-திமுகவில் சேருவதற்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர் என்றும் திமுக என்பது நேற்று முளைத்த காளான் அல்ல என்றும் திமுகவை பேரறிஞர் அண்ணா உருவாக்கிய போது, இக்கழகம் ஆட்சிக்கானது மட்டுமல்ல, மக்களுக்கு பணியாற்ற வேண்டும், பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இவ்வியக்கம் தொடங்கப்பட்டது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ,இன்றைக்கு சிலர் கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வருவோம் என்று கூறும் நிலை நாட்டில் இருந்துக்கொண்டிருக்கிறது என்று நாங்கள்தான் அடுத்த ஆட்சி, நாங்கள்தான் அடுத்த முதல்-அமைச்சர் என சிலர் சுற்றிக்கொண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்என்றும் அவர் யார், எப்படிப்பட்டவர், எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை என்றும் காரணம் அவர்களுக்கெல்லாம் அடையாளம் காட்ட நான் விரும்பவில்லை என தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ,அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்கு உரிய அங்கீகாரத்தையும் கவுரவத்தையும் குறைக்க நான் விரும்பவில்லை என ஆவேசமாக பேசினார்.
மேலும் அடுத்த முறையும் தனது உரையை படிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் இதே கவர்னர் தமிழ்நாட்டுக்கு தொடர வேண்டும் என பிரதமர், உள்துறை மந்திரிக்கு கோரிக்கை விடுக்கிறேன் என அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார் .
மேலும் திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது என பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும், மீண்டும் சொல்வோம் மக்களுக்கு இந்த ஆட்சியின் சாதனைகளை நினைவுபடுத்தினாலே போதும். 200 அல்லது 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறலாம் என்றும் நிச்சயமாக சொல்கிறேன் 7வது முறையாக மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
English Summary
Some people are saying that we are the next government MK Stalin slams Vijay, Seeman