கிரிப்டோ கரன்சி விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்... உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு...!
Petition in court seeking a ban on cryptocurrency advertising
கிரிப்டோ கரன்சி விளம்பரங்களுக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் மனு அளிக்கப்படுள்ளது.
தற்போது கிரிப்டோ கரன்சியில் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் கிரிப்டோ கரன்சி குறித்து முறையான விதிமுறைகள் வகுக்கவில்லை.
மேலும், கிரிப்டோ கரன்சி குறித்து ஊடங்களில் விளம்பரங்கள் வெளிவருவதை தடை செய்ய கோரி திருநெல்வேலியை சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகளில் பாதுகாப்பு அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், கிரிப்டோ கரன்சி மூலம் மோசடி நடைபெறுவதாலும் எந்த விதிமுறை இல்லாமல் இருக்கும் கிரிப்டோ கரன்சிகளின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என குறிப்பிடப்படுள்ளது.
English Summary
Petition in court seeking a ban on cryptocurrency advertising