ரூ.2000 நோட்டைகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம்!!
Rs2000 notes can be exchanged at RBI
கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி 2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2000 நோட்டுகளை கொடுத்து விட்டு ரூ.100, ரூ.500 போன்ற நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என கடந்த அக்டோபர் மாதம் 7வரை ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்தது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியிட்ட போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது.
அவற்றில் தற்போது 97.76 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மேலும் ரூ.7,961 கோடியிலான இரண்டாயிரம் நோட்டுகள் மக்களிடம் உள்ளது. அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் செலுத்தி செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
English Summary
Rs2000 notes can be exchanged at RBI