மாட்டிறைச்சி உணவு எங்கே? பொங்கிய நீலம் பண்பாட்டு மையம்! அரங்கு 17-ல் இருக்கு - விளக்கம் அளித்த விழா குழு! - Seithipunal
Seithipunal


கடந்த 20 ஆம் தேதி முதல், சென்னை மெரினாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. 

வரும் 24-ந்தேதி வரை நடக்கும் இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், இதில் மாட்டுக்கறி உணவுகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக அட்டகத்தி இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் குற்றம் சாட்டியது.

உணவு எங்கள் உரிமை. மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உணவு திருவிழாவில் கரூர் மாவட்ட உணவு அரங்கு எண்.17-ல் மாட்டிறைச்சி உணவும் விற்பனை செய்யப்படுவதாக விழா ஏற்பாட்டு குழுவான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Food Festival beef Neelam Cultural Centre 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->