அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை! செபி அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய பிரபல தொழிலதிபர் அணில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து செபி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும், அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இதேபோல், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்துக்கு ஆறு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின்  நிதியை மோசடியாக வேறு செலவுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது செபி இந்த உத்தரவை பிறக்கத்துள்ளது

மேலும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு நிறுவனத்திற்கு 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் திட்டங்களில் மோசடி நடந்திருப்பதாகவும், இந்த மோசடி குறித்து 225 பக்க குற்றச்சாட்டுகளை அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தும், 25 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sebi ban 5 years to Anil Ambani


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->