சென்செக்ஸ் 4 ஆயிரம் புள்ளிகள் சரிவு... முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
Sensex plunges over 4000 points Investors are shocked
இன்று 79,335.48 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. 78,041.59 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. 1176.46 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.இந்த வாரத்தின் ஐந்து நாட்களும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து இன்றைய வர்த்தகம் சென்செக்ஸ் 78,041.59 புள்ளிகள் நிறைவடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்துள்ளது.
நேற்று 79,218.05 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 79,335.48 புள்ளிகளில் வர்த்தம் தொடங்கியது. வர்த்தகம் தெடங்கிய சிறிது நேரத்தில் உயர்வை சந்தித்தது. 9.45 மணியளவில் 79,587.15 புள்ளிகள் வர்த்தகம் ஆனது.
இதனால் தொடர்ந்து உயர்வு இருக்கும் என முதலீட்டாளர்கள் நினைத்த நிலையில், உடனடியாக தலைகீழாக இறக்கம் கண்டனம். இன்று குறைந்த பட்சமாக 77,874.59 புள்ளிகள் வர்த்தகம் ஆனது. வர்த்தகம நிறைவடையும் நேரத்தில் சற்று உயர்வை சந்தித்து 78,041.59 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1176.45 புள்ளிகள் சரிந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 82,133.12 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. திங்கட்கிழமை 82,000.31 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி, 81,748.57புள்ளிகளில் நிறைவடைந்தது. அன்றைய தினம் 384.53 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் 81,511.81 புள்ளிகளில் தொடங்கி 80,684.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. 1,064.12 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.புதன்கிழமை 80,666.26 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி, 80,182.20 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. 502.25 புள்ளிகள் குறைந்த வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்று வியாழக்கிழமை 79,029.03 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி 79,218.61 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. 939.59 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.இன்று 79,335.48 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. 78,041.59 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. 1176.46 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
English Summary
Sensex plunges over 4000 points Investors are shocked