கருப்பு தின பேரணி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.!
tamilnadu bjp leader annamalai arrest for black day rally
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பாஷா கடந்த 16-ந்தேதி உயிரிழந்தார்.
அவரது உடல் மறுதினம் உக்கடம் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை கண்டித்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க., இந்து அமைப்புகள் சார்பில் இன்று கருப்பு தின பேரணி நடைபெற்றது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் கருப்பு தின பேரணியில் பங்கேற்ற பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
tamilnadu bjp leader annamalai arrest for black day rally