அதிரடியாக உயர்ந்த வெங்காயம் விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!
small onion price increse
தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து தினமும் அதன் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டேவுள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளி, பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து, பெரிய வெங்காயம் விலை குறைந்துள்ளது. அதாவது, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கம்பம், ஒட்டன்சத்திரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து சின்னவெங்காயம் தினசரி 300 டன் வருகிறது.
ஆனால், இன்று காலை மார்க்கெட்டுக்கு 150 டன் சின்ன வெங்காயம் வந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ சின்ன வெங்காயம் 50 ரூபாயில் இருந்து 120 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாயில் இருந்து 38 ரூபாய்க்கு குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதி கடைகளில் ஒரு கிலோ சின்னவெங்காயம் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
English Summary
small onion price increse