சோமாலியா || தலைமை அலுவலகத்தில் இரட்டை குண்டு வெடிப்பு.! 12  பேர் பலி.!  - Seithipunal
Seithipunal


சோமாலியா நாட்டில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்ட அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. 

அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு சோமாலிய அரசை கவிழ்பதற்காக பொதுமக்கள் மற்றும் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், அந்நாட்டின் ஹிரன் மாகாண தலைமை அலுவலகத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. 

இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் தலைமை அலுவலகத்தில் இருந்த ஹிரன் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

இந்நிலையில், சோமாலிய பாதுகாப்பு படையினர் அல்ஷபா அமைப்பின் முக்கிய தலைவன் அப்துல்லாவை கடந்த சனிக்கிழமை சுட்டுக்கொன்ற நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

somaliya country touble bomb explossion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->