தமிழகம் முழுவதும் இன்று 10 ம் வகுப்பு செய்முறைத் தேர்வு ஆரம்பம்.!
today start 10th class practical exam start
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு இன்று முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
தேர்வுத் துறை வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்த விதமான குளறுபடியுமின்றி குறிப்பிட்ட காலத்துக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு நடத்தப்படும் பள்ளியின் தலைமை ஆசிரியரே அந்த மையத்தின் தலைமைக் கண்காணிப்பாளராக செயல்பட வேண்டும். ஏதேனும் புகார் எழுந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப் பேற்க நேரிடும். ஆகவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
today start 10th class practical exam start