ரோகித் சர்மாவை மறைமுகமாக விமர்சித்தாரா தோனி..? சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதம்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உள்ளூர் போட்டியான ஐ.பி.எல். தொடரின் 18- வது சீசன் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்கும் போட்டின் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 02-வது ஆட்டம் வருகின்ற 28-ஆம் தேதி பெங்களூரு அணியுடன் மோத உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி கேப்டன் பொறுப்பை கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஒப்படைத்தார். தற்போது அணியின் சாதாரண விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். கடந்த சீசனோடு தோனி  ஓய்வு பெற்று விடுவார் என்று பலரும் கூறினர். ஆனால், இந்த சீசனிலும் தோனி விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்திள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் மகேந்திரசிங் தோனி பேட்டி ஒன்றை அளித்தார். அதில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்தது ஏன்? அவர் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்த பல்வேறு கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதில்கள் பின்வருமாறு;.

"ஒரு கேப்டனாக இருக்கும் வீரர் எந்த அளவு பேட்டிங்கில் கை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக விளையாட வேண்டும். ஒரு வீரராக உங்களுடைய செயல்திறன் சிறப்பாக இல்லை என்றால் என்னதான் நீங்கள் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும் அது அணிக்கு பாதகமாக முடியும். ஒரு கேப்டன் தனது பேட்டிங் பார்மில் சிறந்த செயல்திறனை கொண்டிருந்தால் தான் அது அணிக்கும் சிறந்ததாக அமையும். முதலில் கேப்டனுடைய தனிப்பட்ட பார்ம் முக்கியம் அதன்பிறகு தான் கேப்டன்சி" என்று கூறினார்.

தோனி இவ்வாறு கூறியதை திரித்து ரோகித் சர்மாவின் ரசிகர்கள் கடும் விவாதத்தில் இறங்கியுள்ளனர். தோனி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. ஏனெனில், சமீப காலங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான பார்மில் இருந்த ரோகித் சர்மா இந்தியாவின் தோல்விக்கு காரணமாய் அமைந்தார். ஆகவே, இது குறித்துதான் தோனி பேசியுள்ளார் என்று விவாதங்கள் எழுந்துள்ளன.

ஆனால், ரோகித் சர்மா கடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருது வென்றதோடு, இந்திய அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did Dhoni indirectly criticize Rohit Sharma


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->