அதிர்ச்சி - தக்காளி விலை கிடு கிடு உயர்வு.!
tomatto price increase
சமையலுக்கு பயன்படும் முக்கியமான காய்கறிகளில் ஒன்று தக்காளி. அப்படிப்பட்ட இந்தத் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வாரம் தக்காளி விலை 30 முதல் 40 ரூபாய் வரை இருந்த நிலையில் படிப்படியாக விலை உயர்ந்து தற்பொழுது ஒரு கிலோ தக்காளி விலை மொத்தம் விற்பனையில் 65 ரூபாய் வரை உள்ளது.
அதன் படி, கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் முதல் தர தக்காளி 65 ரூபாய் வரையிலும், சில்லறை சந்தையில் 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாய்க்கும், ஒரு கிலோ பீன்ஸ் 110 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் மொத்த விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், காய்கறி சந்தையில் இருந்து தக்காளியை வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்யும் வியாபாரிகள் 90 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதனால், இல்லதரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.