நாம் தமிழர் கட்சிக்கு ஒரு கெட்ட செய்தி! ஒரு நல்ல செய்தி! கொண்டாட்டத்தில் தவெக தொண்டர்கள்! தட்டி தூக்கிய விஜய்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைவதாக வெளியான செய்திக்கு, நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் மறுப்பு தெரிவித்துள்ளார். 

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா இன்று தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங்க் பொறுப்பை தலைமையேற்று ஆதவ் அர்ஜுனா நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதே போல் அதிமுகவின் ஐடி விங்க் நிர்வாகி நிர்மல் குமார் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இன்று இணைத்துக் கொண்டுள்ளார். 

நிர்மல் குமாரும், ஆதவ் அர்ஜுனாவும் பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்திற்கு இன்று பகல் 2 மணி அளவில் இணைந்துள்ளனர்.

இதேபோல் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி காளியம்மாள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதற்கு காளியம்மாள் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவர் திமுகவில் இணைய உள்ளார், அதிமுகவில் இணைய உள்ளார் என்ற செய்திகள் வெளியான போது, அவர் எப்போதும் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை, அவர் நாம் தமிழர் கட்சியிலேயே தொடர்ந்து பயணிப்பார் என்று நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Kaliyammal TVK Vijay Seeman Adhav arjuna Nirmal kumar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->