அரசின் உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகளின் அகீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்..ஓம் சக்திசேகர் வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


தனியார் பள்ளிகளில் 6 மணிக்கு மேல் எந்த வித வகுப்புகளும் நடைபெறக்கூடாது என்றும் அரசின் அறிவுறுத்தலை மீறி செயல்படும் பள்ளிகளை கண்காணித்து மீறி செயல்படும் பள்ளிகளின் அகீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனஅதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு. ஓம் சக்திசேகர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு. ஓம் சக்திசேகர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது :புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் மற்றும் கட்டாய வகுப்புகள் என்ற பெயரில் எந்த ஒரு வகுப்புகளையும் மாலை 6 மணிக்கு மேல் நடத்தக் கூடாது என்றும் சனி, ஞாயிறு உள்ளிட்ட அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களில் கட்டாயப்படுத்தி மாணவர்களை வகுப்புகள் எடுக்கக் கூடாது என்றும் அவ்வாறு செய்யும் பட்சத்தில்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை இயக்குனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

காலம் கடந்த அறிவிப்பு என்றாலும் வரவேற்க வேண்டிய அறிவிப்பாக இது அமைந்துள்ளது. 
ஏனெனில் 100% தேர்ச்சியை காட்ட வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்தை மட்டுமே மையமாகக் கொண்டு மாணவர்கள் நலன், மாணவர்களின் உடல்நிலை பற்றிய நலன், மாணவர்களை பல்வேறு சிரமங்களுக்கு இடையே படிக்க வைக்கும் பெற்றோர் நலன் பாராமல் 100% தேர்ச்சி என்ற வணிக நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு இந்த உத்தரவு ஓரளவுக்கு கடிவாளமாக அமையும்.

ஒரு மாணவனை பொருத்தவரையில் இளமையில் அவனுக்கு தேவை கல்வி அதைவிட தனி மனித ஒழுக்கம் மிக முக்கியமானது கூடுதலாக போதுமான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை முக்கியமாகும். புதுச்சேரியில் எந்த பள்ளியும் ஒழுக்கம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. 

நமது நாட்டின் பெருமை தேசப்பற்று உள்ளிட்ட முக்கிய அம்சங்களையும் மாணவர்களுக்கு போதிப்பதில்லை. 
ஒரு மாணவன் தான் எங்கிருந்து வருகிறான் தான் வசிக்கும் பகுதியின் பெயர் என்ன? ஊர் என்ன இவ்வாறு புதுச்சேரி மாநிலத்தின் பூலோக ரீதியான விவரங்களை கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. மேலும் மாணவர்களுக்கு பொது அறிவினை வளர்த்திடும் பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு பள்ளிகள் கற்பிக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு பிறப்பிக்கும் எந்த ஒரு உத்தரவையும் மதிக்காமல் தான் தோன்றிதனமாக ஒரு சில தனியார் பள்ளிகள் முன்னதாகவே பொது தேர்வுகளுக்கான வகுப்புகளை தொடங்குவதும். அரசு விடுமுறை நாட்களைக் கூட விடுமுறை அளிக்காமல் அரசின் உத்தரவை மதிக்காமல் மாணவர்களை கசக்கி பிழிந்து சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பாடங்களை நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இது மாணவர்களிடையே ஒருவித அச்ச உணர்வையும் மன அழுத்தத்தையும் உண்டாக்கி வருகிறது. 

மேலும் ஒரு சில தனியார் பள்ளிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முறையாக கட்டணம் செலுத்தி படித்து வரும் மாணவ மாணவிகளை தாங்கள் பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சற்று படிப்பில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை தனியார் மூலம் பொது தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது மிகப்பெரிய சட்ட விரோத செயல். இதனை ஒரு சில தனியார் பள்ளிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதற்கு கல்வித் துறையை சேர்ந்த ஒரு சில அதிகாரிகளும் துணையாக உள்ளது வெட்கக்கேடான செயல். 

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 மணிக்கு மேல் எந்த வித வகுப்புகளும் நடைபெறக்கூடாது என்றும் அரசின் அறிவுறுத்தலை மீறி விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்தக் கூடாது என்றும் தற்போது கல்வித்துறை அறிவித்துள்ள அறிவிப்பை முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் கல்வித்துறை மட்டுமல்லாமல் மேலும் பல அரசு துறைகளை அதிகாரிகள்,கல்வி ஆர்வலர்கள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி அரசின் உத்தரவை மீறி அரசு வகுத்துள்ள நேரத்தை மீறி செயல்படும் பள்ளிகளின் அகீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசு கேட்டுக்கொள்கிறேன் என ஓம் சக்திசேகர் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The recognition of private schools that violate the government order should be cancelled. Om Shaktisekhar urges


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->