ஸ்பெயினில் களைகட்டும் தாக்களித் திருவிழா.!!
tomatyna party in spain
ஸ்பெயினில் களைகட்டும் தாக்களித் திருவிழா.!!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தக்காளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். அத்தியாவசிய தேவைக்கு கூட தக்காளி வாங்க முடியாமல் சிரமத்தில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் கிழக்கு நகரமான புனோலில் ஒவ்வொரு வருடமும் "டொமடினா" என்கிற தக்காளி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், ஒருவர் மீது ஒருவர் பழுத்த தக்காளிகளை தூக்கி எறிந்து விளையாடுவார்கள். இந்த திருவிழாவிற்காக சுமார் 120 டன் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 15,000 பேர் தக்காளியுடன் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வர். இந்தத் தக்காளி திருவிழாவால் தெருக்கள், வீடுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் என்று அனைவரும் தக்காளி ஜூஸில் நனைந்தனர்.
இந்த திருவிழாவிற்கான டிக்கெட்டுகள் 12 யூரோக்களில் இருந்து தொடங்குகிறது. காசு கொடுத்து தக்காளியை வீண் செய்யும் இந்த வினோத திருவிழா இந்திய மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.