#திடீர்திருப்பம் || FakeID- தொல்லையால் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தம் - எலான் மஸ்க்.! - Seithipunal
Seithipunal


டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (ரூ.3.12 லட்சம் கோடி) வாங்குவதற்கு தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.

ட்விட்டர் நிறுவனத்தில் சுமார் 9 பங்குகளை வைத்துள்ள இவர் அதன் இயக்குனர்கள் குழுவில் இடம் பெற மாட்டேன் எனக் கூறிய அடுத்த இரண்டு நாட்களிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் பிரெட் டெய்லருக்கு, எலான் மஸ்க் எழுதிய கடிதத்தில், "உலகம் முழுவதும் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக இருக்கும் என நம்பியதால் ட்விட்டர் நிறுவனத்தில் முதலீடு செய்தேன். எனினும் தற்போதைய வடிவத்தில் சமூகத்துக்கு ட்விட்டர் நிறுவனத்தால் சேவையாற்ற முடியாது என இப்போது உணர்கிறேன். 

ட்விட்டர் ஒரு தனியார் நிறுவனமாக மாற்றப்படவேண்டும். எனது கருத்தை பரிசீலனை செய்யவில்லை என்றால் பங்குதாரராக எனது நிலையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்" என்று தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்திய மதிப்பில் சுமார் 3.35 லட்சம் கோடி ரூபாய்க்கு டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டு உள்ளார்.

இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், "போலி கணக்குகள் காரணமாக கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த பயன்பாட்டில் 5 சதவீதத்திற்கு குறைவான போலி கணக்குகள்" என்றும் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter elon musk Twit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->