அதிர்ச்சி - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது.!
eight tamilnadu fishermans arrested
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் தமிழக மீனவர்களை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
eight tamilnadu fishermans arrested