லாரி மீது டெம்போ மோதி விபத்து - 8 பேர் பலி!
8 killed as truck collides with truck
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் வர்கா நகரில் இரும்பு கம்பி ஏற்றி சென்ற லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் வர்கா நகரில் நேற்று இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அதேபோல், நிப்ஹட் நகரில் இருந்து 16 பேருடன் சிட்கோ தொழிற்பேட்டைக்கு டெம்போ சென்றுகொண்டிருந்தது.
அப்போது லாரியும் ,டெம்போவும் ,வர்கா நகர் அருகே அய்யப்பன் கோவில் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது , எதிர்பாராதவிதமாக டெம்போ எதிரே இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இதனால் அந்த பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் டெம்போவில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்தவிபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் வர்கா நகரில் இரும்பு கம்பி ஏற்றி சென்ற லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
English Summary
8 killed as truck collides with truck