சமத்துவ பொங்கலில் வாகன சாகசம் - கல்லூரி மாணவர்களின் வாகனம் பறிமுதல்.!
students bike seized for stunt in samathuva pongal
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுப்பையாபுரம் பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில், நேற்று முன்தினம் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கல்லூரிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
பின்னர் மாணவர்கள் தங்களது விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் கல்லூரி வாசல் முன்பு சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்த இடம் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர், சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். சுமார் 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
students bike seized for stunt in samathuva pongal